CLEAR VIDEO EXPLANATION
மின்னழுத்தம் (Electric Voltage)
மின்னழுத்தத்தைப்
புரிந்து கொள்ள முதலில் ஓர் எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்.
நமது
வீடுகளில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளில் (Overhead
tank) தண்ணீரை மின்னோடி (Motor) மூலம் முழுவதும் நிரப்புவோம். சுற்றிலும் உள்ள காற்றின் அழுத்தத்தினால் தொட்டித் தண்ணீர் அழுத்தத்துடன் இருக்கும். இத்தண்ணீரின் அழுத்தத்தை வழங்கு மின்னழுத்தத்துடன் (Supply
Voltage) ஒப்பிடலாம்.
ஒரு கடத்தியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்குத் தேவையான அழுத்தமே மின்னழுத்தமாகும். இது V அல்லது E என்ற எழுத்தால் குறிக்கப்படும். இதன் அலகு வோல்ட் ஆகும். அதிகபட்ச அலகு கிலோ வோல்ட்(kV) குறைந்தபட்சஅலகு மில்லி வோல்ட் (mV) & மைக்ரோ வோல்ட் (µV).
ஒரு
வோல்ட் என்பது ஒரு ஆம்பியர்
மின்னோட்டத்தை
ஒரு
ஓம்
மின்தடையுள்ள சுற்றில் செலுத்தத் தேவை- ப்படும் மின்னழுத்தமே ஆகும்.
மின்னோட்டம் (Electric Current)
மின்னோட்டத்தினைப்
புரிந்து கொள்ள ஓர் எடுத்துக்காட்டு மூலம் முயற்சிக்கலாம். வீட்டில் உள்ள குழாயினைத் திறந்தவுடன் தண்ணீர் செல்வதற்கு வழி கிடைப்பதால் நீர் வேகமாக வெளியேறுகிறது. மேல்நிலை நீர்த் தொட்டியில் நீர் அழுத்தத்துடன் இருப்பதால் இது நிகழ்கிறது.
In our home, water is filled in the overhead tank using
electrical motor pump. Due to atmospheric air pressure and gravitational force,
tank water is at the higher pressure. The pressure of the water in the tank is
assumed as the supply voltage as shown in Figure
இதே
போல், மின்னோட்டம் பாய்வதற்குத் தகுந்த கடத்தும் கம்பிகள் (Conductors) மூலம் ஒரு பளுவுடன் (எ.கா. மின்விளக்கு)
இணைத்துவிட்டா ல் எலக்ட்ரான்கள் அதிக
அழுத்தப்புள்ளி அதாவது அதிக அழுத்த முனையிலிருந்து குறைந்த அழுத்த முனையை நோக்கி வேகமாக நகரும். இதுவே மின்னோ ட்டம் ஆகும்.
Likewise, if we connect an electrical load through proper
conducting wires, Electrons will flow from higher density point to lower density
point as shown in Figure. This is called Electric Current.
No comments:
Post a Comment